2026 மார்ச் 23, திங்கட்கிழமை

மூன்றாவது நாளாக தொடரும் மீனவர்களின் ஆர்ப்பாட்டம்

Gavitha   / 2016 பெப்ரவரி 27 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா

திருகோணமலை -புல்மோட்டை பகுதியில் சுமார் 400க்கும் மேற்பட்ட மீனவர்கள் வெளிமாவட்ட மீனவர்களின் வருகையை எதிர்த்து இன்று சனிக்கிழமை (27) மூன்றாவது நாளாகவும் கவனயீப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருகோணமலை  -புல்மோட்டை சந்தியில் இடம் பெற்று வரும் இக்கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திர் ஈடுபட்டுள்ளவர்கள், 2116 மீனவக் குடும்பங்கள் வாழ்ந்து வரும் இப்புல்மோட்டை பகுதியில் 686 மீனவப் படகுகள் காணப்படுவதாகவும் கடற்றொழிலை நம்பி சீவியத்தை கழித்து வருவதாகவும்  சுட்டிக்காட்டுகின்றனர்.

வெளிமாவட்ட மீனவர்கள் பருவகாலங்களில்  புல்மோட்டைக்கு வருகை தந்து, அதி நவீன கருவிகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதினால், இங்குள்ள மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அதனை நிறுத்தக் கோரியும் இவ்வார்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

2016ஆம் ஆண்டில் வெளி மாவட்ட மீனவர்களை எமது பகுதிகளில் தொழில் நடவடிக்கைகளுக்காக வருகை தருவரை அனுமதிப்பதில்லை என்று கடந்த 2015-03-16ஆம் திகதி, எமது பகுதிகளில் உள்ள மீனவ சங்கங்களுக்கு எழுத்து மூலமாக வழங்கிய வாக்குறுதிகளை நிறை வேற்றுங்கள் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

வெளியூர் மீனவர்களை அழைத்து வரும் உளளூர் முதலாளிமார்களே,  எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்காதீர்கள் போன்ற பதாதைகளை ஏந்தியவாறு இந்த ஆர்ப்பாடம் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை  கவனயீப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இரண்டு மீனவர்களின் படகுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .