Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
George / 2016 ஜூன் 16 , மு.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா
திருகோணமலை மொறவெவ ஆரம்ப சுகாதார பராமரிப்பு வைத்தியசாலையை யானைத் தாக்குதலில் இருந்து பாதுகாக்க மின் வேலியை அமைத்து தருமாறு கோரிக்கைவிடுத்து, பிரதேச மக்கள் இன்று வியாழக்கிழமை(16) காலை வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை, வைத்ததியசாலையின் தேவைகளை நிவர்த்தி செய்து தருவதுடன் வைத்தியருக்கான தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த வருடம் நியமிக்கப்பட்ட வைத்தியர், காட்டு யானைகளின் தொல்லையால் இடமாற்றம் பெற்று சென்றதாகவும், வைத்தியர் இல்லாததால் ஒரு வருடத்துக்கும் அதிகமாக இந்த வைத்தியசாலை மூடப்பட்டிருந்ததாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
ஜூன் மாதம் (14)ஆம் திகதி, இரண்டாவது தடவையாகவும் காட்டு யானைகளின் தாக்குதலினால் இவ்வைத்தியசாலை சேதமாக்கப்பட்டுள்ளதால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வைத்தியருக்கும் வைத்தியசாலைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டுமெனவும் அப்பகுதியிலுள்ள மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
திருகோணமலை-ஹொரவ்பொத்தானை பிரதான வீதியிலுள்ள வைத்தியசாலைக்கு முன்னாள் இவ்வார்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
எனினும், அதிகாரிகள் எவரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்கு வரவில்லை. சுமார் 30 நிமிடங்கள் வீதியை மறித்து நடைபெற்ற ஆர்பாட்டத்தையடுத்து, மொறவெவ பொலிஸ் பொறுப்பதிகாரி எச்.டி.என்.குலதுங்கவின் வேண்டுகோளையடுத்து, வீதியை மறைத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வீதியோரமாக நின்று தொடர்ந்தும் ஆர்பாட்டத்தை மேற்கொண்டனர்.
இதனையடுத்து, அங்கு சென்ற மொறவெவ பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் ஏ.அலாவுதீன், பிரதேச செயலாளர் விடுமுறையில் சென்றுள்ளதாகவும் எதிர்வரும் 22ஆம் திகதி தற்காலிக மின் வேலியை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து ஆர்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
59 minute ago
2 hours ago
5 hours ago