Princiya Dixci / 2016 ஏப்ரல் 18 , மு.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா
திருகோணமலை, 05ஆம் கட்டைப் பகுதியில் 73 வயதுடைய மாமியாரைத் தாக்கியை மருமகனை, இன்று திங்கட்கிழமை (18) காலை கைதுசெய்துள்ளதாக சீனக்குடாப் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) வீட்டில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக மாமியார் தன்னை ஏசியதாகவும் அதனால் கோபம் கொண்டு மாமியாரைத் தாக்கியதாகவும் பொலிஸாரிடம் சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்குள்ளான மாமியார், அதே பகுதியைச் சேர்ந்த பீ.என்.பின்னிஹாமி எனவும் மயக்கமுற்ற நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட மருமகனை, திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக சீனக்குடா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
17 minute ago
36 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
36 minute ago
52 minute ago