Gavitha / 2016 பெப்ரவரி 29 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார்
திருகோணமலை இஸ்லாமிய வாலிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் யுத்த மற்றும் சமாதான அறிக்ககையிடல் நிறுவனத்தின் அனுசரனையுடன், ஜமாலியா இளைஞர்களுக்கான முரண்பாடுகளும் தீர்வும் எனும் தலைப்பில் முழுநாள் செயலமர்வு ஜமாலியா முஸ்லீம் மகா வித்தியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்றது.
ஓய்வுநிலை முதல்வர் எம்.பீ.எம்.முஸ்தபா வளவாளராக கலந்து கொண்ட இந்தச் செயலமர்வில், சுமார் 40 இளைஞர்கள் கலந்துக்கொண்டனர்.
இந்த செயலமர்வின் போது, முரண்பாடுகளின் முக்கியத்துவம், முரண்பாட்டுக்கான மூலகாரணி, பேச்சுவார்த்தை ,சமாதானம் செய்தல், தீர்வு காணுதல் போன்ற அமர்வுகள் இடம் பெற்றதாக, இஸ்லாமிய வாலிபர் சங்கத்தின் செயலாளர் எம்.எம்.முக்தார் தெரிவித்தார்.


22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026