Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2016 ஜூலை 23 , மு.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பொன்ஆனந்தம், எப்.முபாரக்
இனங்களுக்கிடையில் முரண்பாட்டை தூண்டுகின்ற சக்திகளை தடுப்பது நல்லாட்சி அரசாங்கத்தின் கடமைாகும். இதனை எதிர்காலத்தில் வளர விடக்கூடாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஜே. எம் லாகீர் வேண்டுகொள்விடுத்தார்.
நேற்று காலை ஆரம்பமான 61வது கிழக்குமாகாண சபை அமர்வில் தனிநபர் பிரேரணையொன்றை சமரப்பித்து ஆர். எம்.அன்வர் உரையாற்றினார். குறிப்பாக சிறுபான்மை சமூகமான முஸ்லிம்களுக்கெதிராக பொதுபலசேனாவினால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் நல்லாட்சி அரசாங்கத்தினால் உடன் நிறுத்தப்பட வேண்டும் என்ற பிரேரணையே கொண்டு வந்தார். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாங்ஙிய அவர்,
பொதுபலசேனாவின் உறுப்பினரான ஞானசாரதேரர் சிறுபான்மை சமூகத்ததையும் சாடுகிறார், நாட்டின் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களையும் சாடுகிறார். இவர்களைப் போன்றவர்களின் நடவடிக்கைகளை நல்லாட்சி அரசாங்கத்தில் அனுமதிக்க கூடாது.
இன்று கொண்டுவரப்பட்ட இப்பிரேரணையானது இனவாத, மதவாத கண்ணேட்டத்தோடு பார்வையிடாமல். இது ஒரு முஸ்லிம் சமூகத்துக்கும் சிங்கள சமூகத்துக்குமிடையிலான ஒரு முரண்பாடாக பார்க்ககூடாது. உண்மையில் இது ஒரு முஸ்லிம் சமூகத்துக்கும் பொதுபலசேனாவின் தலைவர் ஞானசாரதேரரின் தலைமையிலான குளுவிற்குமிடையிலான பிரச்சினையாகவே பார்க்கப்பட வேண்டும்
முப்பது வருடங்களாக தொடர்ந்த யுத்தம் எமக்கு சிறந்த படிப்பினையை தந்துள்ளது. அதனை பாடமாகக் கொண்டு நாட்டின் தலைவர்கள் செயற்பட வேண்டும். முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரையில் பேருவளையில் நடந்த சம்பவத்தின் பின்னர் அச்சமூகம் நடந்து கொண்ட அணுகுமுறையானது. சகலரும் அறிந்த விடயமாகும்.
அந்த சம்பவத்தின் பின்னர் எமது சமூகம் தீவிரவாத அணுகுமுறையை பின்பற்றவில்லை. மாறாக சமாதானத்தை கடைப்பிடிக்கவே செயற்பட்டது. தீவிரவாத நோக்கத்தை கடைப்பிடிக்காத சமூகம் என்பதற்கு அது சிறந்த உதாரணமாகும். எனவே, இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் அதனை தூண்டுகின்ற சக்தி களை ஒரு போதும் இனிவரும் காலங்களில்அனுமதிக்க கூடாது என்றார்.
திருகோணமலை மாவட்டத்தில் அனல் மின் நிலையத்தை அமைக்கக்கூடாது. எப்படியாவது அனல் மின் ஒப்பந்தத்தினை இடைநிறுத்தி ,வேறு பிரதேசங்களில் அமைத்தாலும் பரவாயில்லை என்ற நிலைப்பாட்டிலே திருகோணமலை சம்பூர்,மூதூர் மக்கள் இருக்கின்றார்கள். எப்படியாவது கூடிய விரைவில் மக்களுக்கான முடிவொன்றினை வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .