Suganthini Ratnam / 2017 ஜனவரி 06 , மு.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தில் முறையான அதிபர் இடமாற்றக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படாமையால், சில அதிபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோவின் கவனத்துக்கு சில பொதுநல அமைப்புகள் கொண்டுவந்துள்ளன.
சில அதிபர்கள் அடிக்கடி இடமாற்றப்படும் அதேவேளை, சிலர் மிக நீண்டகாலமாக தங்களுக்கு வசதியான பாடசாலைகளில் கடமை புரிய அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேற்படி அமைப்புகள் தெரிவித்தன.
கிண்ணியாக் கல்வி வலயத்தில் ஒரு அதிபர் ஒரே பாடசாலையில் தொடர்ந்து 22 வருடங்கள் கடமை புரிந்து வருகின்ற போதிலும், கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் இந்த விடயத்தை கண்டுகொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, முறையான அதிபர் இடமாற்றக் கொள்கை கிழக்கு மாகாணத்தில் அமுல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துமாறு ஆளுநரிடம் மேற்படி அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.
3 minute ago
9 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
9 minute ago
1 hours ago
1 hours ago