2025 மே 13, செவ்வாய்க்கிழமை

யானையின் உடலம் மீட்பு

Editorial   / 2017 நவம்பர் 13 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட், எப்.முபாரக்

திருகோணமலை, குச்சவெளி, திரியாய் பகுதியில் உள்ள பிரதான வீதிக்கு அருகாமையில் யானையொன்றின் உடலம், இன்று (13) காலை மீட்கப்பட்டதென, குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

யானை, வயது மூப்பின் காரணமாக அல்லது மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்திருக்கலாமெனச் சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறிருப்பினும், வைத்திய பரிசோதனையின் பின்னரே குறித்த யானை, எவ்வாறு உயிர் இழந்தது என்பது தொடர்பில் உறுதிப்படுத்திக் கூற முடியுமெனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பில் குச்சவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X