2025 நவம்பர் 17, திங்கட்கிழமை

யானையின் உடலம் மீட்பு

Princiya Dixci   / 2021 மார்ச் 14 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

திருகோணமலை, கந்தளாய் சீனி ஆலை காட்டுப் பகுதியில் காட்டு யானையொன்று இறந்த நிலையில், வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் நேற்று (13) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேற்படி காட்டுப் பகுதியில் மாடு மேய்க்கச்  சென்றவர்களால் வழங்கபட்ட தகவலுக்கமைய, இறந்த காட்டு யானையின் உடலத்தை, வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது. 

20 வயதுடைய காட்டு யானையொன்றே இறந்துள்ளதாகவும் நோய் வாய்ப்பட்டு இறந்துள்ளதா அல்லது ஏதாவது காயங்கள் காரணமாக இறந்துள்ளதா போன்ற பரிசோதனைகள் மேற்கொண்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X