Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
தீஷான் அஹமட் / 2017 நவம்பர் 08 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரியான முறையில் பயன்படுத்தாதமை கவலையளிப்பதாக, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
ஈச்சிலம்பற்று கல்விக் கோட்டத்தில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு கவலை தெரிவித்தார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் மேலும் உரையாற்றுகையில்,
“ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்ற தமிழ் பாடசாலைகளில் முஸ்லிம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்ற போது, அவர்கள் குறிப்பிட்ட சில காலத்தில் இடமாற்றம் செய்து, முஸ்லிம் பாடசாலைகளுக்குச் செல்கின்றனர். இதற்கு உயர் மட்டத்திலிருக்கின்ற அதிகாரிகள் ஒத்துழைப்புகளை வழங்குகின்றார்கள். இதனால், தமிழ் பாடசாலைகளின் கல்வி வீழ்ச்சி அடைகின்றது.
“இந்த விடயங்களை தகர்த்தெறிய வேண்டுமாக இருந்தால், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் அக்கரை கொண்டு வைத்திய, பொருளியல், சட்டத் துறைகளுக்குப் பிள்ளைகளை அனுப்ப முற்பட வேண்டும் அப்போது, எமது மக்களும் உயர் பதவிகளை வகித்து, கல்வித் துறைக்கு பெரும் பங்காற்றுவார்கள்.
“இலங்கையில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்ற கல்விக் கோட்டத்தில் திருகோணமலை ஈச்சிலம்பற்று கல்விக் கோட்டமும் ஒன்று என்பதை நினைவுக்கும் போது கவலையளிக்கின்றது.ஏனெனில், இந்த ஈச்சிலம்பற்றில் நான் அரச உத்தியோகத்தராக யுத்த காலத்தில் கடமை புரிந்திருக்கின்றேன். அதனால் உங்களது கவலை எனக்குத் தெரியும்.
“எனினும், இப்பிரதேச கல்வி வளர்ச்சிக்கு என்னாலான பூரண ஒத்துழைப்புக்களை வழங்குவேன்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
42 minute ago
1 hours ago
1 hours ago