Princiya Dixci / 2016 ஜூன் 08 , மு.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை கந்தளாய் பிரதேசத்தில் மூன்று இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த சந்தேகநபரை, இம்மாதம் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் தம்மிக்க, நேற்று செவ்வாய்கிழமை (07) உத்தரவிட்டார்.
கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கந்தளாய் பிரதேசத்திலுள்ள ஒருவரிடம் வியாபாரத்திற்காக மூன்று இலட்சம் ரூபாய் பணத்தினை பெற்ற குறித்த சந்தேகநபர், அப்பணத்தை வழங்காமல் தலைமைறைவாக இருந்துள்ளார்.
இது தொடர்பில், பணம் வழங்கியவர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து, சந்தேக நபரை, திங்கட்கிழமை (06) கைது செய்த பொலிஸார், அவரை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே, மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
3 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
55 minute ago
1 hours ago