Niroshini / 2016 ஜனவரி 03 , மு.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை, டொக்கியாத் வீதியிலுள்ள ஹோட்டலொன்றில் ரொட்டி மேக்கராக பணியாற்றிய 28 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவர், சனிக்கிழமை(02) இரண்டரை இலட்சம் ரூபாய் பணத்தையும் கைத்தொலைபேசியையும் திருடிக்கொண்டு தலைமறைவாகியுள்ளார்.
நுவரெலியா, சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞன், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ரொட்டி போடும் வேலைக்காக வந்து சேர்ந்துள்ளார். தினமும் அதிகாலையில் எழுந்து ரொட்டி போடும் வசதிக்காக கடை உரிமையாளர், நம்பிக்கையின் பேரில் ஹோட்டல் திறப்பை அவரிடம் கொடுப்பது வழக்கம்.
இந்நிலையில், குறித்த இளைஞன், சம்பவத் தினத்தன்று நள்ளிரவு 2 மணியளவில் லாச்சியை உடைத்து தனது அடையாள அட்டையையும் சிகரட் கடை ஊழியர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த சம்பளப் பணம் இரண்டரை இலட்சம் ரூபாயும் கையடக்கத்தொலைபேசியையும் திருடிக்கொண்டு தலைமறைவகியுள்ளார்.
இது தொடர்பில், ஹோட்டல் உரிமையாளர் திருகோணமலை தலைமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
5 minute ago
39 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
39 minute ago
44 minute ago