2025 மே 19, திங்கட்கிழமை

லங்காதீப பத்திரிகையின் பிராந்திய செய்தியாளரைத் தாக்கியவருக்கு விளக்கமறியல்

Thipaan   / 2016 செப்டெம்பர் 06 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா

திருகோணமலை, மொறவெவ பகுதியில் லங்காதீப பத்திரிகையின் பிராந்திய செய்தியாளர் எஸ்.திஸாநாயக்காவை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை, இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் செல்லுமாறு,  திருகோணமலை நீதிமன்ற நீதவான் விஷ்வானந்த பெர்ணான்டோ, நேற்றுத் திங்கட்கிழமை (05) உத்தரவிட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் திருகோணமலை, மொறவெவ பகுதியைச் சேர்ந்த பிரசன்ன விஜித பியங்கர (45 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தன் கடையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை, நீயா செய்தியாளர் என கேட்டு மது போதையில் வந்தவர் தாக்கியதாக மொறவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அம்முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட மொறவெவ பொலிஸார் சந்தேகநபரை கைது செய்து, நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்திய போதே பிணையில் செல்ல உத்தரவிடப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி வழக்குக்கு சமூகமளிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X