2025 மே 19, திங்கட்கிழமை

லங்காதீப பத்திரிகையின் பிராந்திய செய்தியாளர் மீது தாக்குதல்

Gavitha   / 2016 செப்டெம்பர் 04 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா

திருகோணமலை-மொறவெவ பிரதேச ஊடகவியலாளர் இன்று ஞாயிற்றுக்கிழமை (04) தாக்குதலுக்குள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு தாக்குதலுக்குள்ளானவர் திருகோணமலை-மொறவெவ பகுதியைச்சேர்ந்த லங்காதீப பத்திரிகையின் பிராந்திய செய்தியாளரான எஸ்.திஸாநாயக்க (65வயது) என்று  பொலிஸார் தெரிவித்தனர்.

தான் தனது கடையில் இருக்கும் பொழுது மதுபோதையில் வந்த நபர் நீ ஒரு செய்தியாளரா என கேட்டு விட்டு தாக்கியதாக பாதிக்கப்பட்ட செய்தியாளரின் தனது வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்குள்ளான செய்தியாளர், மஹதிவுல்வௌ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

தாக்குதல் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மொறவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X