எப். முபாரக் / 2017 நவம்பர் 12 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, ஜயந்திபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், வடிசாராயம் காய்த்த இடமொன்றினை முற்றுகையிட்ட பொலிஸார், இரண்டு சந்தேக நபர்களை நேற்றிரவு (11) கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் வான்எல மற்றும் சூரியபுர பகுதியைச் சேர்ந்த 54,மற்றும் 38 வயதுடைய நபர்களையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், இவர்களிடமிருந்த மூன்று பரல்கள்,மூன்று சீனி மூட்டைகள், இரண்டு மூடை கோடாக்கள் மற்றும் குழாய் வட்டைகள் போன்றவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
19 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
50 minute ago
1 hours ago