Suganthini Ratnam / 2017 ஜனவரி 17 , மு.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்
கிண்ணியாப் பிரதேசத்தில் வரட்சி காரணமாக நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், காக்காமுனையில் சுமார் 150 ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கை கைவிடப்பட்டுள்ளது. மேலும் கண்டல்காடு, தீனேரி, குரங்குப்பாஞ்சான், சுண்டியாறு, வாழைமடு, துவரங்குளம், சுரங்கல், நடுவூற்று, கற்குழி, வட்டமடு உள்ளிட்ட இடங்களிலும் வரட்சியால் நெற்செய்கை கைவிடப்பட்டுள்ளது.
தற்போதைய வரட்சி காரணமாக தாம் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவித்த விவசாயிகள், தங்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
11 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
40 minute ago