Editorial / 2019 ஜூலை 23 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ . அச்சுதன்
அகஸ்தியமாமுனிவரின் பாதம் பட்டதும், சிவன் தனது திருவாக்கின் பிரகாரம் அகஸ்தியமாமுனிவர் மூலம் விரும்பிக் குடிகொண்டதும், மகாவலி கங்கையை நாற்புறமும் வேலியாகக் கொண்டதுமான கங்கைவேலி எனும் திருநாமம் கொண்ட திருக்கரைசையம்பதி என்ற வரலாற்றுச் சிறப்புப் பெருமை மிக்க திருகோணமலை - மூதூர், கங்குவேலி ஆதிசிவன் கோவிலின் வருடாந்த ஆடி அமாவாசைத் தீர்த்தோற்ஸவம் அகஸ்தியமாமுனிவர் தீர்த்தமாடிய புனித மகாவலி கங்கைக்கரையில் 31-07-2019 ம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளது.
30-07-2019 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு அடியவர்களின் அரோகராக்கோஷம் எதிரொலிக்க, காவடிகள், புடைசூழ, மேளதாள வாத்தியங்கள் முழங்க ஆதிசிவப் பெருமான் அம்பாள் சமேதராக ஆலயத்திலிருந்து எமுந்தருளி புனித மகாவலி கங்கைக்கரையைச் சென்றடைவார்.
அன்றைய தினம் இரவு தீர்த்தக்கரையிலே அகஸ்தியர் ஸ்தாபன வரலாற்றைக் கூறும் திருக்கரைசைப் புராணம் படித்துப் பயன் சொல்லுகின்ற நிகழ்வும், இந்து சமய கலை நிகழ்வுகளும் இடம் பெற்று மறு நாள் 31 -07- 2019 ம் திகதி புதன்கிழமை காலை தீ மிதிப்பு வைபவமும், திருப்பொற்சுண்ணம் இடிக்கின்ற நிகழ்வும் இடம் பெற்று அதனைத் தொடர்ந்து வரலாற்று சிறப்பு மிக்க தீர்த்தோற்ஸவம் இடம் பெறும், அதன் பின்னர் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
அன்றைய தினம் பிற்பகல் 2.00 மணியளவில் சுவாமி தீர்த்தகரையிலிருந்து எமுந்தருளி ஆலயத்தை வந்தடைந்து அங்கு ஆதிவைரவருக்கு உருண்டைச்சோறு போடுகின்ற பாரம்பரிய நிகழ்வு நடைபெறும்.
அடியவர்களின் நலன் கருதி இரு தினங்களும் திருகோணமலை, மூதூர், ஈச்சிலம்பற்று ஆகிய பகுதிகளிலிருந்து விஷேட பஸ் சேவைகள் கோவில் வரை ஒமுங்கு செய்யப்பட்டுள்ளன.
58 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago
2 hours ago