Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜனவரி 25 , பி.ப. 12:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
திருகோணமலை மாவட்டத்தில் நிலவும் "வறுமை நிலை" பற்றி ஆய்வு செய்வதற்கு, வறுமை பகுப்பாய்வு நிலையத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சேர்ஃப்-லங்கா நிறுவனத்தின் ஸ்தாபகரும் நிறைவேற்று பணிப்பாளருமான இஞ்சினியர் இஹ்ஸான் ஜவாஸனுக்கும் வறுமை பகுப்பாய்வு நிலையத்தின் மனிதவள நிறைவேற்று அதிகாரி அயோமி நாணயகாரவுக்கும் இடையில் நேற்று (24) மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய ரீதியில் பல தரமான ஆய்வுகளைச் செய்யும் பல்வேறு துறைகளில் சிறப்பு தேர்ச்சி பெற்ற நிபுணர்களைக் கொண்டு இயங்கும் வறுமை பகுப்பாய்வு நிலையம் (CEPA- Centre for Poverty Analysis) மேற்கொள்ளும் ஆய்வுகள், பல்வேறு தொண்டு நிறுவனங்கள், சம்பந்தப்பட்ட அரச ஸ்தாபனங்கள், சர்வதேச அமைப்புகள், ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புகளுக்குச் சென்றடைகின்றன.
குறித்த ஆய்வு நடைபெற்ற பிரதேசம் ஏதோவொரு விதத்தில் பயனடைய வேண்டும் என்ற நோக்கில், வறுமை பகுப்பாய்வு நிலையம் பல்வேறுவிதமாகச் செயற்படுகிறது.
திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் பிரதேசம் உட்பட பல்வேறு பகுதிகளில் நிலவும் பின்வரும் விடயங்கள் இன்றைய கலந்துரையாடலில் இஹ்ஸான் ஜவாஸனால் முன்வைக்கப்பட்டன.
1) வறுமை
2) அடிப்படை வசதிகள் இல்லாத பிரச்சினை
3) தொழில் இல்லாத பிரச்சினை
4) பெளதீக வளங்களின் பற்றாக்குறை
5) ஒவ்வொரு தொழில் துறையிலும் நவீன தொழிநுட்பம் இல்லாத பிரச்சினை
6) உட்கட்டமைப்பு பிரச்சினை
7) வைத்திய சேவை மற்றும் சுகாதார துறையில் காணப்படும் தேவைப்பாடுகள்
8) போக்குவரத்து பிரச்சினைகள் மற்றும் தரமற்ற வீதிகள்
9) வடிகாண் மற்றும் வெள்ள அனர்த்தம் தொடர்பான பிரச்சினை
10) தரமற்ற மற்றும் திட்டமிடல் இல்லாத அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பான பிரச்சினைகள்
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago