2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 15 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், எஸ்.சசிக்குமார், ஏ.எம். கீத்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அமைப்பு, திருகோணமலையில் இன்று (15) கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை மேற்கொண்டார்கள்.

 மின்சார நிலைய வீதியில் அமைந்துள்ள திருகோணமலை மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தின் முன்னால், இப்போராட்டம் நடத்தப்பட்டது.

திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களில் இருந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் இதில் கலந்துகொண்டனர்.

 பத்து வருடங்களாகப் போராடியும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் இதுவரை அரசாங்கம் எதுவிதப் பதிலும் வழங்காத  நிலையில்,  நியாயமான பதிலை சர்வதேசம்  கூற வேண்டுமெனக் கோரியே, இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .