2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

வழக்குத் தவணைகளுக்கு சமுகமளிக்காதவருக்கு விளக்கமறியல்

எப். முபாரக்   / 2018 செப்டெம்பர் 24 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை பகுதியில், அனுமதிப்பத்திரமின்றி மதுபானம் அருந்திவிட்டு மோட்டார் சைக்கிள் செலுத்தியமை தொடர்புடைய வழக்குடன் தொடர்புடையவர் சந்தேகநபர், வழக்குத் தவணைகளுக்கு சமுகமளிக்கத் தவறியமையினால் ஒக்டோபர்(09) வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க நேற்று (23) உத்தரவிட்டார்.

சந்தேகநபர், வரோதய நகர், புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவரெனவும், அனுமதிப்பத்திரமின்றி மதுபானமருந்திவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்றபோது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு இவருக்கெதிராக, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வழக்குத்தவணைகளுக்கு சமுகமளிக்காது தலைமறைவாக இருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .