Princiya Dixci / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
ஆட்களை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்புவதாக் கூறி பதின்மூன்றரை இலட்சம் ரூபாய் பணத்தினை மோசடி செய்த சந்தேகநபர், இரண்டு வழக்குகளுக்குச் சமுகமளிக்காமையினால் அவரை, மார்ச் மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் ரி.சரவணராசா, நேற்று வியாழக்கிழமை (25)உத்தரவிட்டார்.
திருகோணமலை, உவர்மலைப் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய நபரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவர், திருகோணமலை பிரதேசத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே இவ்வாறான மோசடியில் ஈடுபட்டார் என்று குற்றச்சாட்டப்பட்டிருந்தது.
குறித்த சந்தேகநபர், அவுஸ்திரேலியாவுக்கு அனுப்புவதாகக் கூறி பதின்மூன்றரை இலட்சம் ரூபாயை, இருபதுக்கும் மேற்பட்டவர்களிடம் மோசடி செய்த வழக்கு, திருகோணமலை நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில் இரண்டு வழக்குத் தவணைகளுக்கு சமுகமளிக்காது அவர், தலைமறைவாகியிருந்தார்.
இந்நிலையில், அவரை கைது செய்த திருகோணமலை பொலிஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026