Princiya Dixci / 2015 டிசெம்பர் 24 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எப்.முபாரக்
திருகோணமலை கந்தளாயில் மதுபானம் அருந்தி விட்டு வீதியில் நின்று கொண்டு குழப்பத்தை ஏற்படுத்தியவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் தவணைகளுக்கு சமூகமளிக்காதவரை அடுத்த மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதவான் நீதிமன்ற பதில் நீதிவான் எம்.எம்.முதார், இன்று வியாழக்கிழமை (24) உத்தரவிட்டார்.
குறித்த சந்தேக நபர், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் மதுபானம் குடித்து விட்டு கந்தளாய் நகரில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.
அவரை கைது செய்த பொலிஸார், அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். எனினும், வழக்கின் தவணைகளுக்கு அவர், சமூகமளிக்கவில்லை.
இதனையடுத்து அவர், கந்தளாய் பொலிஸாரினால் நேற்று புதன்கிழமை (23) இரவு கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போதே, பதில் நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago