2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

வழக்குத் தவணைகளுக்குச் சமூகமளிக்காதவருக்கு விளக்கமறியல்

Niroshini   / 2016 மே 02 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                  

திருகோணமலை, கிண்ணியா பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளைத் திருடி விற்பனை செய்த சந்தேகநபர் பல வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காததால் குறித்த நபரை இம்மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் ஏ.எம்.அப்துல் முஹிட் நேற்று ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார்.                          

கிண்ணியா பைசல் நகர் பகுதியைச் சேர்ந்தத 38 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.                       

குறித்த சந்தேக நபர் மூன்று வருடங்களுக்கு முன்னர் மோட்டார் சைக்கிலொன்றைத் திருடி விற்பனை செய்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு திருகோணமலை நீதிமன்றில் நடைபெற்று வந்துள்ளது.

இந்நிலையில், பல வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காது தலைமறைவாக இருந்த  வேளையில், சனிக்கிழமை (30) கைது செய்து திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே இவ்வாறு உத்தரவிடப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .