Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 பெப்ரவரி 15 , மு.ப. 08:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர்
தபால் மூல வாக்களிப்பை பிற்போட்டது அரசாங்கத்தின் இயலாமையை காட்டுகிறது என திருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச வேட்பாளர் தாலிப் அலியின் இல்லத்தில் நேற்று மாலை (14) நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தில் உள்ளவர்கள் தேர்தலுக்கும் மக்களுக்கும் பயப்படுகிறார்கள். இதன் மூலம் ஆட்சியை தொடர்ந்தும் தக்கவைக்க இந்த அரசாங்கம் முயற்சிக்கிறது.
பல வேட்பாளர்கள் இந்த தேர்தலில் அரச உத்தியோகத்தர்கள் சம்பளமற்ற விடுமுறையில் உள்ளதுடன் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுப்பினர் பதவியை இராஜினமா செய்து தேர்தலில் இறங்கியுள்ளார்கள்.
மக்கள் மத்தியில் சென்று தேர்தலுக்கு செல்ல வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்.
100 ரூபாய்க்கு நெல்லை வாங்குதல் என்ற விடயம் வெரும் பேச்சு மாத்திரமே. விவசாயிகளை ஏமாற்றாது நெல் கொள்வனவு முறையாக இடம் பெற வேண்டும் என்பதை ஜனாதிபதியிடத்தில் வேண்டுகோளாக முன்வைக்கிறோம் என்றார். R
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago