Editorial / 2020 ஜனவரி 30 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமலை ராஜ்குமார், பொன்ஆனந்தம்
திருகோணமலை நகர சபையின் வாராந்த சந்தையை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, அந்நகர சபைத் தலைவர் நா.ராஜநாயகம் தெரிவித்தார்.
திருகோணமலை நகராட்சி மன்றப் பகுதியில் வாராந்த சந்தை இல்லாத குறையைக் கருத்திற்கொண்டு, ஞாயிற்றுக்கிழமை (02) முதல் பிரதி ஞாயிறு தோறும் வாராந்த சந்தை நடத்தவுள்ளதென, அவர் தெரிவித்தார்.
திறப்பு விழா நிகழ்வுகள் எதுவுமின்றி, அன்றையதினம் (02) அமைதியான முறையில் சந்தை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் காலை 07 மணி முதல் மாலை 06 மணி வரை வியாபார நடவடிக்கைகள் நடைபெறுமென்றும் அவர் அறிவித்தார்.
உள்ளூர் உற்பத்தியாளர்களுடைய பொருள்களைச் சந்தைபடுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகுமெனக் கூறிய அவர், இங்கு இறைச்சி, மீன் போன்றனவற்றுக்கான விற்பனை தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இந்த வாராந்த சந்தை தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர், அரசாங்க அதிபர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், பிரதம செயலாளர், உள்ளூராட்சி ஆணையாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஆகியோருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை நகர சபைத் தலைவர் தெரிவித்தார்.
அதேவேளை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு நலன் கருதி, இப்பிரதேசத்தை பொலித்தின் பாவனையற்ற பிரதேசமாக வைத்திருக்குமாறு, வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும், நகராட்சி மன்றம் அறிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .