2025 மே 05, திங்கட்கிழமை

விண்ணப்பங்கள் கோரல்

அப்துல்சலாம் யாசீம்   / 2018 ஒக்டோபர் 20 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் கற்று பிரசாரம் செய்யும் ஆலீம்களை உருவாக்கும் நோக்கில் அநுராதபுரம், ஹொரவ்வபொத்தானை றஷீதிய்யா அரபுக் கல்லூரியின் 2019 ஆம் ஆண்டிற்கான புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

குர்ஆன் மனனம் (ஹிப்ளு), ஷரிஆ (கிதாபு) ஆகிய இரு பிரிவுகளை இணைத்துக் கொள்வதற்காக விண்ணப்பங்களே கோரப்பட்டுள்ளன.

குர்ஆன் மனனம் பிரிவிற்கான தகமைகளாக நல்லொழுக்கமுடையவராகவும் தேகாரோக்கியமுடையவராகவும் அல்குர்ஆனை நன்கு  ஒதத்தெரிந்தவராகவும் இருப்பதோடு, தாரம் 6 கல்வி கற்பவராகவும்  11 வயதுதினை பூர்த்தியடைந்தவராகவும் இருக்க வேண்டும்.

ஷரீஆ(கிதாபு) பிரிவிற்கு  நல்லொழுக்கமுடையவராகவும் தேகாரோக்கியமுடையவராகவும் அல்குர்ஆனை நன்கு  ஒதத்தெரிந்தவராகவும் இருப்பதோடு, தரம் 8 கல்வி கற்பவராகவும் 13 வயதினை பூர்த்தியடைந்தவராகவும் இருக்க வேண்டும்.

குறித்த விண்ணப்பங்களை, நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் அதிபர், றஷீதிய்யா அரபுக் கல்லூரி, முக்கரவெவ,  ஹொரவ்வபொத்தானை எனும் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறும், மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள 0252278372, 0773696498, 0777164676 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X