அப்துல்சலாம் யாசீம் / 2017 நவம்பர் 10 , பி.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை -ஹொரவ்பொத்தானை பிரதான வீதி, மஹதிவுல்வெவ குளத்துக்கு அருகில், இன்று (10) இடம்பெற்ற விபத்தில், 07வயது சிறுவன் உயிரிழந்துள்ளாரென, மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம்-சாவகச்சேரி, பேசாலை பகுதியைச்சேர்ந்த நகுலன் தசுதரண் (வயது 7) என்ற சிறுவனே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேற்படி சிறுவன் வீதியை கடக்க முற்பட்டபோது, வவுனியாவிலிருந்து திருகோணமலை நோக்கி வந்த இ.போ.ச பஸ்ஸில் மோதுண்டு உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனைக்காக மொறவெவ வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதியை கைதுசெய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
17 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
48 minute ago
1 hours ago