Editorial / 2019 மார்ச் 02 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை – ஹொரவ்பொத்தானை, பிரதான வீதி 10ஆம் கட்டைப்பகுதியில், இன்று காலை பவுசர் ஒன்றும் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில், சைக்கிளில் பயணித்த வயோதிபர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர், மொறவெவ, 10ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த வல்பொல சாலலாகே ஆரியபால (63வயது) என, பொலிஸார் தெரிவித்தனர்.
மாதம்பை பகுதியிலிருந்து திருகோணமலைக்கு பெற்றோல் ஏற்றுவதற்காக சென்ற பவுசர் குறுக்கே திருப்ப முற்பட்ட போதே, சைக்கிளுடன் மோதி இவ்விபத்து சம்பவித்துள்ளது.
விபத்துடன் தொடர்புடைய பவுசர் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
10 minute ago
38 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
38 minute ago
1 hours ago