Princiya Dixci / 2021 பெப்ரவரி 21 , பி.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை-ஹொரவ்பொத்தானை பிரதான வீதியில் இன்று (21) காலை இடம்பெற்ற விபத்தில் வைத்தியரின் மகள் படுகாயமடைந்த நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உப்புவெளி போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு படுகாயமடைந்தவர், திருகோணமலை- பாலையூற்று பகுதியைச் சேர்ந்த பீ.நிலாசினி (29 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த கார், வளைவொன்றில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த வைத்தியரின் மகள் படுகாயமடைந்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பில் உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
25 minute ago
28 minute ago
39 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
28 minute ago
39 minute ago
43 minute ago