2025 மே 06, செவ்வாய்க்கிழமை

விறகு எடுக்கச் சென்றவர் மீது கரடி தாக்குதல்

எப். முபாரக்   / 2018 செப்டெம்பர் 18 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, கந்தளாய் பிரதேசத்தில், காட்டுக்கு விறகு எடுக்கச் சென்றவர், கரடித் தாக்குதலுக்குள்ளாகி, பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், கந்தளாய் தள வைத்தியசாலையில், நேற்று (17) அனுமதிக்கப்பட்டார்.

கந்தளாய், கோவில் கிராமம் பகுதியைச் சேர்ந்த என்.ஆனந்தராசா (வயது 49) என்பவரே, கரடித் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.

விறகுகளை வெட்டிக்கொண்டிருக்கும் போது, மரப்பொந்து ஒன்றிலிருந்து பாய்ந்து வந்து, கரடி தாக்கியுள்ளதென, வைத்தியசாலைப் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X