Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜனவரி 15 , பி.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம், எஸ்.சசிக்குமார்
திருகோணமலை, குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திரியாய் கிராம விவசாயிகளுக்கென, அவுஸ்திரேலியா சிட்னி முருகன் ஆலயத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட கிணறுகள், வைபவரீதியாக இன்று (15) பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனின் பிரத்தியேகச் செயலாளர் கே.குகதாஸன் கலந்துகொண்டார்.
தலா ஒவ்வொரு கிணறுகளிலும் 5க்கும் மேற்பட்ட குடும்பங்கள் விவாசாயம், குடிநீர்த் தேவைக்குப் பயன்படுத்தும் இக்கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.
திரியாயில் உள்ள கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஊடாக, விவசாயிகளுக்கு சிறுகடன் உதவிக்கான நிதியுதவியும் இதன்போது வழங்கப்பட்டது.
வட, கிழக்கில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் வருடாந்தம் தலா 5,000 அவுஸ்திரேலிய டொலர்களை, இவ்வாறான திட்டங்களுக்கு சிட்னி முருகனாலயம் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, திரியாய் பிள்ளையார் ஆலய வளாகத்தில் கதிர்காம யாத்திரிகர்களின் சுகாதார வசதிக்கு உதவும் முகமாக மலசலகூட தொகுதியொன்றையும் அமைத்து வழங்கியுள்ளது.
12 minute ago
51 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
51 minute ago
4 hours ago