Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
பொன் ஆனந்தம் / 2019 பெப்ரவரி 25 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை சுகாதாரத் தொழிலாளர்களுக்கு அமைக்கப்பட தீர்மானிக்கப்பட்ட வீட்டுத்திட்ட செயற்பாட்டில் முட்டுக்கட்டைகள் எழுந்துள்ளதாக, திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபைத் தவிசாளர் டாக்டர் ஜி.ஞானகுணாளன் தெரிவித்தார்.
இவ்விடயத்தை, இன்று (25) நடைபெறவுள்ள மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் விவாதத்துக்கு எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது அமைச்சர் சஜித் பிரேமதாஸவினால் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வரும் இத்திட்டத்தில் மூலம் தவிசாளர் கேட்டுக்கொண்டதற்கிணங்க சுகாதராத் தெழிலாளர்களுக்கான வீட்டுத்திட்டம் ஆரம்பிப்பதக்கென, அடிக்கல் அண்மையில் நாட்டப்பட்டது.
இந்நிலையில், குறித்த காணியை விடுவிப்பதில் அதிகாரிகள் இழுத்தடிப்புச் செய்து வருவதாக அவர் கவலை தெரிவித்தார்.
இதனாலேயே, இவ்விடயத்தை இன்றைய மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கவுள்ளதாக, தவிசாளர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago