Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
அப்துல்சலாம் யாசீம் / 2017 நவம்பர் 16 , பி.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, மொறவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாமல்வத்தை பிரதான வீதியை புனரமைத்துத் தருமாறு, அக்கிராமமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மொறவெவ சந்தியிலிருந்து 10 கிலோமீட்டர் செல்லும் நாமல்வத்தை வீதி பல வருட காலம் திருத்தப்படாத நிலையில் குன்றும் குழியுமாக காணப்படுவதாகவும் அவ்வீதியினூடாக அரச பஸ் கூட சேவையில் ஈடுபடுத்தப்படவில்லையெனவும் கிராமமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் கிராமத்துக்கு வருகை தந்து, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும், தேர்தல் முடிவடைந்தவுடன் வீதி அபிவிருத்திப் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் நடைபெற்று முடிந்த மூன்று தேர்தலின் போது, அரசியல்வாதிகள் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வந்தனரெனவும் கிராமமக்கள் தெரிவிக்கின்றனர்.
வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான வீதியா ?அல்லது நீர்ப்பாசன திணைக்களத்துக்குச் சொந்தமான வீதியா? அல்லது மொறவெவ பிரதேச சபைக்கு சொந்தமான வீதியா என்ற விடயம் கூட இன்னும் தெரியாத நிலைக்கு, திருகோணமலை மாவட்ட அரசியல்வாதிகள் பொய் கூறி மக்களை ஏமாற்றி வருவதாகவும் அக்கிராமமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இம்முறை தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக நாமல்வத்தை-மொறவெவ பிரதான வீதியை புனரமைத்துத் தருமாறும் இல்லாவிட்டால் தேர்தலை பகிஸ்கரிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இவ்வீதியினூடாக கற்பிணிகளைக் கூட வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியாமல் அவதியுறுவதாகவும் இனியாவது இவ்வீதியை புணரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நாமல்வத்தை மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
11 minute ago
22 minute ago
27 minute ago