ஏ.எம்.ஏ.பரீத் / 2018 நவம்பர் 08 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட், எப்.முபாரக், ஹஸ்பர் ஏ ஹலீம்,ஏ.எம்.ஏ.பரீத்
மூதூர், பச்சநூர் சந்தியில் வைத்து, இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸொன்று, வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக, மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மொனராகலையில் இருந்து திருகோணமலைக்குச் சென்ற பஸ்ஸே, இன்று (08) அதிகாலை இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது, பஸ்ஸில் பயணித்த எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. எனினும், பஸ் பகுதியளவில் சேதத்துக்குள்ளாகியுள்ளது.
பஸ் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கமே, இந்த விபத்துக்கு பிரதான காரணமென ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து அறியமுடிகின்றதென, மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பில், மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .