2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

வீட்டுக்குள் புகுந்தவருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2017 ஜனவரி 04 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்

திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதியின்றி பெண்ணொருவரின் வீட்டுக்குள் புதுந்து, திருட முயன்ற காபன்திஸ்ஸபுர பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய சந்தேகநபரொருவரை, எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மூதூர் நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் உத்தரவிட்டார்.

சந்தேகநபர், ஜன்னலினூடாக வீட்டுக்குள் நுழைய முற்பட்ட வேளையில், ஒருவர் கண்டு கூக்குரலிட்ட போது, சந்தேகநபர் தப்பியோடியதாகவும், பின்னர் குறித்த வீட்டு உரிமையாளரான பெண்ணினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, திங்கட்கிழமை (02) இரவு, தலைமரைவாக இருந்த நிலையில் சந்தேகநபரைக் கைதுசெய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X