Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Princiya Dixci / 2016 மே 11 , மு.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
இலங்கை பரீட்சைத் திணைக்களத்தால் நடத்தப்படும் அல் - ஆலிம் சான்றிதழ்ப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்பப் படிவங்கள் அஹதியாப் பாடசாலைகள், அனுமதியளிக்கப்பட்ட சகல மத்ரஸாக்களுக்கும் தபால் மூலம் கிடைப்பதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
எதிர்வரும் ஜுன் மாதம் 10ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படடும்.
இப்பரீட்சைக்கு தோற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரிகள், தமக்குரிய விண்ணப்பப்படிவங்களைத் தபால் மூலம் பெறுவதற்கு தமது பெயர் மற்றும் முகவரி எழுதப்பட்ட முத்திரை ஒட்டிய கடித உறைகளை, இம்மாதம் 27ஆம் திகதிக்கு முன்னர் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.
பரீட்சை ஆணையாளர் நாயகம்,
ஒழுங்கமைப்பு - வெளிநாட்டு பரீட்சைகள் பிரிவு,
இலங்கை பரீட்சைத் திணைக்களம்,
பெலவத்தை -பத்தரமுல்லை.
தொலைபேசி இல: 011-2765230
தொலை நகல் இல: 011-2784232
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .