2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

விபத்தில் ஒருவர் உயிரிழப்பு; மூவர் காயம்

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 25 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்

திருகோணமலை -புத்தளம் பிரதான வீதியில் மரதங்கடவெல பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடனொன்று மோதியதினால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

ஹொரவப்பொத்தானை, திப்பிரியத்தாவெல பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான எம்.ரஹீம் (வயது 27) என்பவர் உயிரிழந்துள்ள அதேவேளை, அதே இடத்தைச் சேர்ந்த எம்.மசூத் (வயது 21), எஸ்.முஹாசீக் (வயது 27), எஸ்.எம்.உமைர்தீன் (வயது 19) ஆகியோரே காயமடைந்துள்ள நிலையில் ஹொரவப்பொத்தானை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடுவதற்காக இவர்கள் நான்கு பேரும் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வேகமாகச் சென்றுகொண்டிருந்ததாகவும் இதன்போதே இந்த விபத்துச் சம்பவித்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X