Niroshini / 2016 ஏப்ரல் 30 , மு.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கனகராசா சரவணன், எம்.எம்.அஹமட் அனாம்
மட்டக்களப்பு, திருகோணமலை பிரதான வீதியின் வாழைச்சேனை கிண்ணியடி சந்தியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு தனியார் பஸ்ஸூம் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார்சைக்கிளை ஓட்டிச் சென்றவர் உயிரிழந்துள்ளார்.
கிண்ணியடி, நாகதம்பிரான் கோவில் வீதியை சேர்ந்த 35 வயதுடைய ஜெயராஜ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் வாழைச்சேனையில் இருந்து கிண்ணியாவில் உள்ள வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் பிரயாணித்தபோது, கார் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்டுள்ளார்.
இதன்போது, எதிரே வந்த தனியார் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த குறித்த நபர் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
சம்பவத்துடன் தொடர்புடைய தனியார் பஸ் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago