Sudharshini / 2015 டிசெம்பர் 29 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்,எம்.என்.எம்.புஹாரி
திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆதியம்மன்கேணி பகுதியில், இடம்பெற்ற விபத்தில், அதே பகுதியைச் சேர்ந்த 52 வயதான எஸ்.நவரத்தினம் என்பவர் சிகிச்சைப் பலனின்றி நேற்று (28) உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளும் துவிச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், துவிச்சக்கர வண்டியை செலுத்தி வந்த மேற்படி நபர், படுகாயமடைந்துள்ளார்.
மேற்படி நபரை, மூதூர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அங்கிருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு மீண்டும் மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். எனினும், அங்கு சிகிச்சைப் பலன் இன்றி அவர் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்துடன் தொடர்புடைய நபரை கைது செய்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
36 minute ago
41 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
41 minute ago
52 minute ago