2026 மார்ச் 23, திங்கட்கிழமை

விபத்தில் ஒருவர் பலி

Kogilavani   / 2016 ஜனவரி 03 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.அப்துல் ஹலீம்

தம்பலகாமம், குளக்கோட்டன் வித்தியாலத்துக்கு முன்பு சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் 53 வயது நபர் உயிரிழந்துள்ளார். பாலம்போட்டாறு, முத்து நகரை சேர்ந்த அப்துல் லெத்திப் என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

தம்பலகாமம், கிண்ணியா நோக்கி சென்ற ஜீப் வண்டி, மேற்படி நபர் பயணித்த துவிச்சக்கர வண்டியின் மீது மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்   வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அங்கு  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .