2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

விபத்தில் கான்ஸ்டபிள் பலி

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 04 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸார் சென்ற கெப் வாகனம் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில், பொலிஸ் கான்ஸ்டபிளான கே.லலித் ஆரியவன்ஷ (44 வயது) என்பவர் உயிரிழந்துள்ளார்.  

கடந்த 02ஆம் திகதி அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் கடும் காயமுற்ற நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த வேளையிலேயே, இன்று (04) காலை, இவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

மதுபோதையில் சென்ற சந்தேகநபரொருவரைக்  கைதுசெய்து சட்ட வைத்தியப் பரிசோதனைக்காக, கந்தளாய் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில், மின்கம்பத்துடன் மோதி கெப் வாகனம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த சிவிலியனும் நான்கு பொலிஸாரும் காயமடைந்திருந்தனர்.

ஏனையோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்த நிலையில் குறித்த கான்ஸ்டபிள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சட்ட வைத்திய பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X