Gavitha / 2015 டிசெம்பர் 21 , மு.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை -மரத்தடி பிரதான வீதியில், சனிக்கிழமை (19) இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர், நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) உயிரிழந்துள்ளதாக, பொலிஸார்
தெரிவித்தனர். திருகோணமலை, பூம்புகார் வீதியைச் சேர்ந்த ஏ.எம்.முகம்மது இப்ராஹீம் (வயது 73) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
துவிச்சக்கர வண்டியொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதாலேயே, இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago