Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 22 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை-ஹொரவ்பொத்தானை பிரதான வீதியில் கடந்த 18ஆம் திகதி வீதியோரத்தில் நின்றவருடன் லொறி மோதி படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் இன்று (22) அதிகாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் மஹதிவுல்வெவ.திம்பிரிவெவ பகுதியைச்சேர்ந்த எஸ்.சுகத் பண்டார (46 வயது) எனவும் தெரியவருகின்றது.
கடந்த 18ஆம் திகதி மஹதிவுல்வெவ குளத்துக்குச்சென்று மீன் பிடிப்பதற்காக மீன்பிடி வலைகளை போட்டு விட்டு வரும் போது வீதியோரமாக சென்றவரை லொறி மோதிவிட்டு சென்றதாகவும் தெரியவருகின்றது.
உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சட்ட வைத்தியரின் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணைகளை மொறவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025