Niroshini / 2015 டிசெம்பர் 23 , மு.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை-புத்தளம் பிரதான வீதியில் இன்று (23) முச்சக்கர வண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து எருமை மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பௌத்த பிக்கு உட்பட இருவர் படு காயங்களுக்குள்ளதாக மொறவௌ பொலிஸார் தெரிவித்தனர்.
கிண்ணியா விகாரையின் விகாராதிபதி ஆர்.யசகுல ஹிமி (வயது 87) மற்றும் முச்சக்கர வண்டியின் சாரதியான தீ.எம்.ரத்னபால (வயது 56) ஆகிய இருவருமே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த பௌத்த பிக்கு அனுராதபுர பகுதிக்கு வைத்திய சிகிச்சைக்காக செல்லும்போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான இருவரும் மகாதிவுள்வௌ கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago