2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வியாபார நிலைய கொள்ளை முறியடிப்பு: ஒருவர் கைது; இருவர் தப்பியோட்டம்

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 21 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத், பதுர்தீன் சியானா

திருகோணமலை-கண்டி பிரதான வீதியிலுள்ள 96ஆம் கட்டை முள்ளிப்பொத்தானை மருத்துவமனைக்கு முன்னாலுள்ள மொத்த வியாபார நிலையமொன்றினை, இன்று புதன்கிழமை (21) அதிகாலை உடைத்து, அங்கிருந்த பொருட்களை ஏற்றிக்கொண்டிருக்கும் போது ஒருவரைக் கைதுசெய்துள்ளதுடன், தப்பியோடிய இருவரையும் கைதுசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர், கண்டி-திகனப் பகுதியைச் சேர்ந்த எம்.றிழ்வான் (வயது 34) எனவும் பொருட்கள் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்த லொறியையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார்.

பால்மா பக்கட்டுக்கள், சீனி, சிகரெட் மற்றும் அத்தியவசியப்பொருட்கள் ஆகியவற்றையே இவர்கள் கொள்ளையிட முயன்றுள்ளனர்.

இன்று அதிகாலை, சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொலிஸார், குறித்த வியாபார நிலைய வீதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட வேளை, அந்நிலையத்திலிருந்து சந்தேகநபர்கள் தப்பியோடுவதை அவதானித்த பின்னரே ஒருவரைக் கைதுசெய்துள்ளதாகத் தெரியவருகின்றது.

மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X