2025 மே 23, வெள்ளிக்கிழமை

வெருகல் பிரதேச செயலக ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 04 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா,தீசான் அஹமட்

போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தருமாறு கோரி வெருகல் பிரதேச செயலக ஊழியர்கள் இன்று திங்கட்கிழமை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

வெருகல் பிரதேச செயலகத்தில் கடமையாற்றுகின்ற மட்டக்களப்பு மாவட்ட  ஊழியர்கள் தனியார் மற்றும் இ.போ.ச. பஸ்களிலுமே கடமைக்குச் சமூகமளித்திருந்தனர். இவ்வாறு கடமைக்கும் வரும் மற்றும் செல்லும் நேரங்களில் உரிய நேரத்துக்கு பஸ்கள் கிடைக்காமையால் வெருகல் பிரதே செயலகத்தில் கடமையாற்றுகின்ற சுமார் 50 ஊழியர்கள் தனியார் பஸ் ஒன்றை மாதாந்த கொடுப்பனவின் அடிப்படையில் அமர்த்தி கடமைக்குச் சமூகமளித்தனர். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை குறித்த பஸ் வண்டியில் வெருகல் பிரதேச செயலாளர் சென்றபோது குறித்த பஸ் வண்டிக்கு ஏறாவூர் பஸ் டிப்போ சாரதி இடையூறு விளைவித்துள்ளார். பஸ்ஸை விட்டு இறங்கிய பிரதேச செயலாளர் தாம் பயணிக்கும் பஸ்ஸுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாமெனக் கூறியுள்ளார். இதன்போது, குறித்த பஸ் சாரதி பிரதேச செயலாளருக்கு இரும்புக் கம்பியைக்  காட்டி எச்சரித்துள்ளார். இதற்கு உரிய நடவடிக்கையினை எடுக்க வேண்டுமென பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

மேலும்,  நாளை எமது ஊழியர்கள் கடமைக்குத் திரும்புவார்கள். ஏறாவூர் பஸ் டிப்போ குறித்த பஸ் சாரதிக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளாது போனால் தாம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X