Suganthini Ratnam / 2016 மார்ச் 07 , மு.ப. 07:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா
திருகோணமலை மாவட்டத்தில் மீனவர்கள் அதிகளவில் வாழ்கின்ற கிராமமான புல்மோட்டைக் கிராமத்தில் அரிசிமலை, பொன்மலைக்குடா, சுனாமி ஆகிய வீட்டுத்திட்டங்களுக்குச் செல்லும் வெற்றிலைக்கேணி பாலத்தைப் புனரமைப்பதற்கான நடவடிக்கை 2016ஆம் ஆண்டு அபிவிருத்தித் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது. இதற்கு நிதி ஒதுக்கப்பட்டவுடன் புனரமைப்பு வேலை ஆரம்பிக்கப்படுமென அம்மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார தெரிவித்தார்.
இப்பாலப் புனரமைப்பு தொடர்பில் அரசாங்க அதிபரிடம் கேட்டபோதே, அவர் இதனைக் கூறினார்.
2006ஆம் ஆண்டு பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் 15 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இப்பாலம், 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின்போது, சேதமடைந்தது. இருப்பினும், இதுவரை காலமும் இப்பாலம் புனரமைக்கப்படவில்லை.
மேற்படி வீட்டுத்திட்டங்களில் வசிக்கும் சுமார் 300 குடும்பங்கள் புல்மோட்டை நகருக்கு வருவதாயின், 6 கிலோமீற்றர் தூரம் சுற்றி வர வேண்டியுள்ளது. இப்பாலத்தை புனரமைத்துத் தருமாறு அரசாங்க அதிகாரிகளிடமும் அரசியல்வாதிகளிடமும் தெரியப்படுத்தியபோதிலும், எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென பொதுமக்கள் தெரிவித்தனர்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026