Suganthini Ratnam / 2016 ஏப்ரல் 07 , மு.ப. 08:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா
திருகோணமலை மாவட்டத்தில் அதிக வெப்பமான காலநிலை நிலவிவரும் நிலையில், இன்று வியாழக்கிழமை பகல் வயலில் வேளாண்மை வெட்டிக்கொண்டிருந்த இருவர் மயக்கமடைந்த நிலையில் மகாதிவுல்வெவ கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மொத்தமாக ஆறு பேர் வேளாண்மை வெட்டிக்கொண்டிருந்தனர். இதன்போது, மதிய உணவுக்காக மரநிழலில் நின்றுகொண்டிருந்த இவர்கள் இருவரும் மயக்கமடைந்து விழுந்து கிடந்ததை சக ஊழியர் அவதானித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இவர்கள் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடிப் பகுதியைச் சேர்ந்த எம்.சிவலிங்கம் (வயது 46), என்.சதாசிவம் (வயது 48) ஆகியோரே மயக்கமடைந்தனர்.
அதிக வெய்யில் காரணமாகவே இவர்கள் மயக்கமடைந்ததாக மகாதிவுள்வெவ கிராமிய வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி ரஞ்சித் விதானகே தெரிவித்தார்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago