Niroshini / 2015 செப்டெம்பர் 04 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்
தற்கொலைகளை தடுக்கும் முகமாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட தொடர் சைக்கிளோட்டம், நேற்று வியாழக்கிழமை திருகோணமலையை வந்தடைந்தது.
இந்நிகழ்வு திருகோணமலை ரொட்டறி கழகத்தின் தலைவர் கிறிஸ்ரி ஐபோ தலைமையில் நடைபெற்றது.
தைரியம், இரக்கம், பொறுப்பேற்றல் என்ற பெயரையுடைய, நிறுவனமும் திருகோணமலை ரொட்டறி கழகமும் இணைந்து இதனை ஏற்பாடுசெய்தன.
இதேவேளை, 'பேச்சு சுதந்திரம்' என்ற தலைப்பில் ஓவிய போட்டியும் நடைபெற்றது.
இப்போட்டியில் கலந்துகொண்டு முதல் 3 இடங்களை பெற்ற மானவர்களுக்கு ஒரு வருடத்துக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
மேலும்,போட்டிகளில் பங்குபற்றியவர்களுக்கு இலங்கை கிரிக்கட் அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார கையெழுத்து இட்ட சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

10 minute ago
13 minute ago
14 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
13 minute ago
14 minute ago
19 minute ago