2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வாழ்வாதாரத்தைக் கொண்டுசெல்வதில் சிரமம்

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 13 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொன் ஆனந்தம்

தங்களின் வாழ்வாதாரத்தைக் கொண்டுசெல்வதில் நாளாந்தம் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாக  திருகோணமலை, சம்பூர் பிரதேசத்திலுள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் தெரிவித்தன.

சம்பூர் பிரதேசத்துக்கு சனிக்கிழமை (12)  வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் விஜயம் செய்து பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது யுத்தப் பாதிப்புக்கு உள்ளாகி கணவன்மார்களை, பிள்ளைகளை இழந்த பெண்கள் தங்களின் பிரச்சினைகளை முன்வைத்தனர்.

இப்பிரதேசத்தில் 02 கட்டங்களாக 975 குடும்பங்கள் இதுவரையில் மீள்குடியேறியுள்ளன. இவற்றில்  பெண் தலைமைத்துவக் குடும்பங்கள்  270 உள்ளதாக மாவட்டச் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  
இதன்போது சம்பூர் ஸ்ரீமுருகன் வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்காக அவர்களின்; தாய்மார்களிடம்  அப்பியாசக் கொப்பிகளை வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் வழங்கினார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .