Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 01 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பொன் ஆனந்தம்
திருகோணமலை, மூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கங்குவேலிக் கிராமத்திலுள்ள விவசாயக் காணிக்கு வனவளத் திணைக்களம் இட்டுள்ள எல்லைக்கற்களை அகற்றி, விவசாயிகள் அக்காணியில் விவசாயச் செய்கையில் ஈடுபடுவதற்கு உதவுமாறு கங்குவேலி அகத்தியர் விவசாயச் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் கோரிக்கை விடுத்து திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார மற்றும் கிழக்கு மாகாண மீள்குடியேற்ற, புனர்வாழ்வு மற்றும் கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணிக்கும் மகஜர் புதன்கிழமை (31) கையளித்துள்ளதாகவும் அச்சம்மேளனம் தெரிவித்தது.
அம்மகஜரில்; தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'கங்குவேலிக் கிராமத்தில் 87 விவசாயிகளுக்குச் சொந்தமாக சுமார் 162 ஏக்கர் விவசாயக் காணி உள்ளது. இக்காணியில் சேனைப்பயிர்ச் செய்கை மற்றும்; நெற்செய்கையில் விவசாயிகள் ஈடுபட்டுவந்திருந்தனர்.
பட்டித்திடல், மேன்கமம், கங்குவேலி, புளியடிச்சோலை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளே இக்காணியில் விவசாயச் செய்கையில் ஈடுபட்டுவந்தனர்.
தற்போது இக்காணி வனவளத் திணைக்களத்துக்குச் சொந்தமானது என்று அடையாளப்படுத்தி அத்திணைக்கள அதிகாரிகள் எல்லைக் கற்களை இட்டுள்ளனர்.
இக்காணி தங்களுக்குரியது என்று கூறி அக்காணி உரித்தாளர்கள், பல தடவைகள் வனவளத் திணைக்கள அதிகாரிகளிடம் கலந்துரையாடியுள்ளனர். இருப்பினும், இக்காணி விடுபடவில்லை என்பதை கவலையுடன் தெரியப்படுத்துகிறோம். ஆகவே, தமது காணிப் பிரச்சினைக்கு உரிய தீர்வைப் பெற்றுத்தருமாறும் கோருகின்றோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 minute ago
22 minute ago
43 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
22 minute ago
43 minute ago
59 minute ago